குரூப்-1 தேர்வில் முறைகேடு..? விமர்சன வீடியோ வெளியிட்டவர் மீது பாய்ந்த வழக்கு

குரூப் 1 தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 13:51 GMT

சென்னை,

குரூப் 1 தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு உயர்பதிவிகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட தேர்வான முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரும் 5 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆனால் அவசர அவசரமாக முதன்மைத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்து தென்காசியை சேர்ந்த தேர்வர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது சைபர் கிரைம் போலீசில் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்ததன் பேரில் அந்த தேர்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குரூப் 1 தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டதும், அந்த வழக்குகளில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த சில பயிற்சி நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்