கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-31 22:41 IST

திசையன்விளை:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சிவகாமி நகரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 38). 2019-ம் ஆண்டு ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் இவர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு போலீசார், திசையன்விளை போலீசார் உதவியுடன் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் பழனிகுமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்