காவிரி, வைகை, குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ெரயிலை சிவகங்கை, மானாமதுரை ெரயில் நிலையங்களில் நிறுத்த வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்செய்தனர்.

Update: 2022-06-03 18:20 GMT

சிவகங்கை, 

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ெரயிலை சிவகங்கை, மானாமதுரை ெரயில் நிலையங்களில் நிறுத்த வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தென்னக ெரயில்வே நிர்வாகம் இன்று முதல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து தமிழ் நாட்டில் வேளாங்கண்ணி வரை வாரம் இருமுறை இயக்க உள்ள விரைவு ெரயிலை மானாமதுரை மற்றும் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நிறுத்த வேண்டும்.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் அதிவிரைவு ெரயிலை சிவகங்கை மார்க்கத்தில் மானாமதுரை ெரயில்வே சந்திப்பு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை ரெயில் நிலையம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஆா்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார்.பொது செயலாளர் அர்ச்சுனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் முகவை மலைச் சாமி, தவம், மாயாண்டிசாமி, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்