வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரம்

ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-28 19:41 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டை இணைப்பு

வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆலங்குளம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கரிசல்குளம், கொங்கன்குளம், நதிக்குடி, கல்லமநாயக்கர்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி இ.டி.ரெட்டியபட்டி, முத்துச்சாமிபுரம், குண்டாயிர்ப்பு, கண்டியாபுரம். உப்பு பட்டி, மாதாங்கோவில்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம் ஆகிய கிராமங்களில் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன் ஆலோசனையின் பேரில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் மேற்பார்வையில் வாக்குசாவடி அலுவலர்கள் 23 பேர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிகள் தீவிரம்

இவர்கள் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததுடன் ஆதார் அட்டைையயும் இணைத்து வருகின்றனர்.

ஆலங்குளம் பகுதிகளில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 50 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் இந்த பணி முடிவுபெறும் என வாக்குசாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்