பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிதம்பரம்நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராஜவர்மன்(வயது 31). இவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் ராஜவர்மனிடம் கேட்டுள்ளார். ஆனால் ராஜவர்மன், தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாககூறி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் அரியலூர் மாவட்ட மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜவர்மனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.