முத்தையாபுரத்தில்ஆடு திருடிய வாலிபர் கைது

முத்தையாபுரத்தில்ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-27 00:15 IST

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர்நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (வயது67). இவர் முத்தையாபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது ஓட்டலுக்கு பின்னால் உள்ள திறந்தவெளியில் அவருடைய 4 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது ஆடுகளில் ஒன்று காணாமல் போயிருந்தது. இது குறித்து அவரது புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முத்தையாபுரம் தங்கமணிநகரைச் சேர்ந்த மிக்கேல் மகன் சதீஷ்குமார் (22) என்பவர் ஆட்டை திருடியது தெரிய வந்தது. திருடப்பட்ட ஆட்டை மீட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்