பெண்ணை அவதூறாக பேசிய வாலிபர் கைது

நெல்லை அருகே பெண்ணை அவதூறாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-31 01:35 IST

பேட்டை:

நெல்லையை அடுத்த பழையபேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னபாக்கியம் (வயது 50). இவர் தனது ஆடுகளை அப்பதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் டேவிட் (20) என்பவர் அன்னபாக்கியத்திடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டேவிட், அன்னபாக்கியத்தை அவதூறாக பேசிய திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னபாக்கியம் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்