காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்த முனியசாமி மகள் முத்துபிரியா (வயது 24) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம் என்பவரின் மகன் ராஜேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முனியசாமி தரப்பில் இருந்து யாரும் செல்லாத நிலையில் பின்னர் சில மாதம் கழித்து முனியசாமி தனது மகள் முத்துபிரியாவுக்கு 3 பவுன் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜேஷ்குமாருக்கும், முத்துபிரியாவுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முத்துபிரியா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முனியசாமி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.