பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரத்தில், பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-26 14:43 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில், பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி பெண்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்தவர் முத்துமாரி. கோவில் பூசாரி.

இவரது மனைவி அனுசுயா (வயது 30). எம்.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இவர்கள் குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது பாவூர்சத்திரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முத்துமாரி பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரில் கோவில் பூஜை நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அனுசுயா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அனுசுயா உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்