போலீசாரை கண்டதும் தப்பியோடிய ஜோடிகள்
போலீசாரை கண்டதும் தப்பியோடிய ஜோடிகள்
திருப்பூர்
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் நேற்று காலை சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு சென்றனர். மசாஜ் சென்டர் என்று கூறப்பட்ட அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த போலீசார் சுற்றி சுற்றி வந்தும் திறக்க முடியவில்லை. அதன்பிறகே அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன. போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. அந்த அறையை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.