திண்டுக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-07-11 21:00 GMT

திண்டுக்கல் குடைப்பாறைபட்டியை சேர்ந்த முருகன் மகன் பன்னீர்செல்வம் (வயது29). கூலித்தொழிலாளி. இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். மேலும் பன்னீர்செல்வத்துக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியாக வசித்ததால் விரக்தியில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்