புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது
புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி ரம்யா (வயது 32) தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்யாவை கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.