புகையிலை பாக்கெட் விற்ற பெண் கைது
சோளிங்கர் அருகே புகையிலை பாக்கெட் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி கீதா (வயது 55), பெட்டிக்கடை வைத்துள்ளார். கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்த போது ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கீதாவை கைது செய்தனர்.