மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்சு ஊழியர்கள் பல மீட்டர் தூரம் தூக்கி வந்தனர்.

Update: 2022-09-26 10:07 GMT

மாமல்லபுரம்,

மகாளய அமாவாசையையொட்டி நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதி மற்றும் புஷ்கரணி தெப்பக்குளத்தில் பலர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் தர்ப்பணம் கொடுக்க தங்கள் உறவினர்களுடன் கடற்கரை பகுதிக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கடற்கரையில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மணல் பரப்பு ஆதலால் ஆம்புலன்சால் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. அங்குள்ள நுழைவு வாயில் பிரதான சாலையில் ஆம்புலன்சு நிறுத்தப்பட்டு பணியாளர்கள் பல மீட்டர் தூரம் மணல் பரப்பிலேயே நடந்து சென்று உயிருக்கு போராடிய மூதாட்டியை ஸ்டிரச்சரில் வைத்து தூக்கி வந்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை காண்போரை நெகிழச்செய்தது எனலாம். இனியாவது அரசு காலம் தாழ்த்தாமல் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு செல்ல உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்