கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிப்பு

கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2023-09-25 18:45 GMT


ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி கார்டன் 3-வது தெருவை சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுதா (வயது 48). இவர் பிரப்பன்வலசை கிளை நூலகத்தில் நூலகராக பணிபுரிகிறார். பணி முடிந்து வீடு திரும்பியபோது பட்டணம்காத்தன் சோதனை சாவடி அருகே நடந்து சென்ற சுதாவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். காயமடைந்த சுதா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சுதா அணிந்திருந்தது கவரிங் நகை என தெரிவித்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்