மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்து விட்டு தப்பி சென்றனர்

Update: 2022-12-16 19:37 GMT


மதுரை புதுவிளங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 32). சம்பவத்தன்று இவர் மொபட்டில் வெளியே சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்