கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது சேலையில் தீப்பிடித்து உடல் கருகிய பெண் சாவு

கரூரில் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது சேலையில் தீப்பிடித்து உடல் கருகிய பெண் இறந்தார்.

Update: 2023-06-29 19:06 GMT

சேலையில் தீப்பற்றியது

திண்டுக்கல் மாவட்டம், கரிக்காலி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவடுகன் (வயது 53). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா (52). இவர் கரூர் மேட்டுத் தெருவில் உள்ள ெபருமாள் கோவிலில் கடந்த 8-ந்தேதி சாமி கும்பிடுவதற்காக வந்தார்.பின்னர் கோவில் வளாகத்தில் மீனா சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த விளக்கில் அவர் அணிந்திருந்த சேலை பட்டு மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தீயை அணைத்து மீனாவை காப்பாற்றினர்.

பெண் சாவு

இதையடுத்து உடல் கருகிய நிலையில் பலத்த தீக்காயம் அடைந்த மீனாவை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மீனா பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வ

Tags:    

மேலும் செய்திகள்