கொலை வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update:2022-12-21 00:15 IST

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி பகுதியில் மாங்குடி (வயது 42) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கைதான தெக்கூரை சேர்ந்த மகாலிங்கத்தின் மனைவி அன்னக்கொடி (39) மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அன்னக்கொடி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்