குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை

பெரியதடாகம், கணுவாய் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய வீடியோ வைரல் ஆனது.c

Update: 2023-01-07 18:45 GMT

துடியலூர்

பெரியதடாகம், கணுவாய் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய வீடியோ வைரல் ஆனது.

காட்டு யானைகள் முகாம்

கோவையை அடுத்த பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வடவள்ளி- கணுவாய் சாலையில் குடியி ருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை, தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது.

கண்காணிப்பு

இதையடுத்து அந்த யானை, அங்கிருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அவர்கள், காட்டு யானையை கண்கா ணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் காட்டு யானையை கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்டினர் .

இந்த நிலையில் நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் மீண்டும் காட்டு யானை ஒய்யாரமாக நடந்து சென்றது. இதை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வீடியோ வைரல்

இதைத்தொடர்ந்து அந்த யானை குடியிருப்பு பகுதியில் புகுந்து நீண்ட நேரமாக சாலைகளில் சுற்றித்திரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி சங்கனூர் ஓடை வழியாக யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

முன்னதாக குடியிருப்பு பகுதியில் புகுந்து தொட்டியில் காட்டு யானை தண்ணீர் குடிப்பது மற்றும் ரோட்டில் உலா செல்வதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில பதிவிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், யானை ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணித்து வனத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்