குடியரசு தின விழா பணியில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் திடீர் சாவு

குடியரசு தின விழா பணியில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் திடீர் சாவு;

Update:2023-01-26 01:45 IST

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் திடீரென இறந்தார்.

கிராம உதவியாளர்

தஞ்சை கீரைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 56). கிராம உதவியாளரான இவர், நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நேற்று இரவு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர்கள் அறையில் இருந்து நாற்காலிகளை ஏற்றிக்கொண்டு வருவதற்காக சென்றார். அங்கு நாற்காலிகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு வெளியே வாகனத்திற்கு வந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

திடீர் சாவு

உடனடியாக அங்கு பணியில் இருந்த சக வருவாய்த்துறையினர் அவரை தாங்கி பிடித்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இருப்பினும் செல்வராஜை சக ஊழியர்கள், தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். செல்வராஜ் திடீரென இறந்த சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்