கியாஸ் சிலிண்டரை திருடும் டிப்-டாப் ஆசாமி; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கியாஸ் சிலிண்டரை டிப்-டாப் ஆசாமி திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.;

Update:2023-10-25 00:19 IST
கியாஸ் சிலிண்டரை திருடும் டிப்-டாப் ஆசாமி; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மாதவி சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன். அவரது வீட்டு வரண்டாவில் வைக்கப்பட்டிருந்த காலி கியாஸ் சிலிண்டரை ஹெல்மெட் அணிந்த டிப்-டாப்பாக உடையணிந்திருந்த ஆசாமி ஒருவர் திருடிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவி வைரலாகியது. இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் சரவணன் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளுடன் சென்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்