ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-11-04 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

ஜவுளி வியாபாரி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஜெகநாதன் (வயது 36). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு விஜயகுமாரி (34) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமாரி கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு புளியங்குடி சென்று விட்டார்.

தற்கொலை

நேற்று முன்தினம் ஜெகநாதன் புளியங்குடி சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார், ஆனால் விஜயகுமாரி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஊருக்கு ஜெகநாதன் மட்டும் திரும்பி வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜெகநாதன் இரவு படுக்கைக்குச் சென்ற அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் அக்கம்பக்கத்தினர் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ஜெகநாதன் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்