மதுரையில் பழைய கார் உதிரி பாகங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

பழைய கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-03-13 21:02 GMT


பழைய கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கார் உதிரி பாகங்கள்

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் அவ்வையார் தெருவில் பழைய கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் குடோன் உள்ளது. இங்கு பணியாற்றி கொண்டிருந்த ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிஅளவில் திடீரென அங்கிருந்த கார் உதிரி பாகங்களில் தீப்பற்ற தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த தீயானது அங்கிருந்த அனைத்து பொருட்களின் மீதும் பரவ தொடங்கியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திடீர் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் 2 தீயணைக்கும் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்த நிலையில் தீ விபத்தானது பெரிய அளவில் இருந்ததால் மாநகராட்சி லாரிகள் மூலமும் அதிக அளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. மேலும் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பக்கத்து வீட்டில் தீ

குடோன் அருகே உள்ள வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வீட்டில் பரவ தொடங்கிய அந்த தீயை உடனடியாக அணைத்தனர். இதற்கிடையே கார் உதிரி பாக குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பேட்டரிகளும் தீயில் எரிந்ததால் பயங்கர சத்தத்துடன் அவைகள் வெடித்து சிதறின.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயணைக்கும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்