நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் 'லிப்ட்' கேட்டு பயணிப்பதும், பின்னர் ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி, அதனை திருடிக்கொண்டு தப்பியோடி விடுவதாகவும் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் நேற்று திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருச்சி வயலூர் வாசன் நகரை சேர்த்த ராஜசேகரனின் மகன் தேவன்(வயது 21) என்பதும், அவர் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் செல்போன்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.