பொள்ளாச்சி அருகே கார் திருடிய வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே கார் திருடிய வாலிபர் கைது;

Update:2022-10-06 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான காரை உடுமலை ரோட்டில் உள்ள தனது உறவினர் தாமோதரன் என்பவரின் இடத்தில் கடந்த 2 நாளுக்கு முன்பு நிறுத்தி இருந்தார். இந்த கார் திடீரென காணாமல் போனது. இது தொடர்பாக கார்த்திகேயன் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் நேற்று காரை திருடி சென்ற கோவை பீளமேட்டைச் சேர்ந்த அழகர்சாமி மகன் விஜய் (24) என்பவரை கைது செய்தனர். மேலும், திருடப்பட்ட கார் மீட்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்