பிளஸ்-2 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபருக்கு வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே பிளஸ்-2 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.

Update: 2022-11-04 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பிரகாஷ் (வயது 20). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்