பிறந்த நாள் கொண்டாட வந்த வாலிபர் தற்கொலை

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-31 20:30 GMT

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் ஜோடி

நீலகிரி மாவட்டம் மசினகுடி மாயார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மகன் பிரதீப் (வயது26). இவர் மைசூ ரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் காவ்யா (26).

இவர், பிரதீப்பின் பள்ளி தோழி ஆவார். இவர்கள் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். காவ்யா கோவை சரவணம் பட்டி நேருநகர் 3-வது வீதியில் கடந்த 2 மாதமாக வாடகைக்கு தங்கி பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பிறந்த நாள் விழா

காவ்யாவுக்கு வருகிற 8-ந் தேதி பிறந்த நாள் ஆகும். எனவே காதலியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பிரதீப் கடந்த 26-ந் தேதி காவ்யாவின் வீட்டிற்கு வந்து தங்கினார். இந்த நிலை யில் நேற்று காலை காவ்யா தனது தாயாரிடம் பேசுவதற்காக வீட்டின் மாடிக்குச் சென்றார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது பிரதீப் சமையல் அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யா கூச்சலிட்டு கதறி அழுதார். பின்னர் அவர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிரதீப்பை கீழே இறக்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

காதலி தற்கொலை முயற்சி

உடனே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பிரதீப்பை பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனால் மனவேதனை அடைந்த காவியா வீட்டுக்குள் சென்று தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவ்யாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்