ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

Update: 2022-12-28 18:04 GMT

திருவெறும்பூர்-சோழகம்பட்டி இடையே கீழமாங்காவனம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக நேற்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர் நீலநிற ஜீன்ஸ் மற்றும் இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து இருந்தார். ரெயிலில் படிகட்டில் அமர்ந்து அவர் பயணம் செய்தபோது, அதிகாலை நேரத்தில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்