கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது;

Update:2022-07-17 20:37 IST

திருவண்ணாமலை தாலுகா போலீசார் இன்று மல்லவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மல்லவாடி பகுதியை சேர்ந்த குப்பன் (வயது 23) என்பதும், அவர் ஒரு கிலோ மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்