தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
நெல்லை டவுனில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த சாகுல் அமீது மகன் இப்ராகிம் (வயது 25). இவர் நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இப்ராகிம் புகார் அளிப்பதற்காக டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் சிலரிடம், இப்ராகிம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராகிமை கைது செய்தனர்.