மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

Update: 2023-03-13 19:30 GMT

குமாரபாளையம்:-

குமாரபாளையம் மேற்கு காலனியில் வசிப்பவர் ராஜூ (வயது 33). தனியார் நிறுவன தொழிலாளி. இவர், ஆனங்கூர் சாலை காளியண்ணன்நகர் பகுதியில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தடுமாறி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்