விபத்தில் வாலிபர் பலி

தாயில்பட்டி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.;

Update:2023-04-24 00:24 IST

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள போடுரெட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த வரதராஜ் மகன் ராமானுஜர் (வயது22). இவர் இருசக்கர வாகனத்தில் வால்சாபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது துலுக்கன்குறிச்சி அருகே உள்ள வளைவில் திரும்பிய போது பள்ளத்தில் எதிர்பாராதமாக தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலே ராமானுஜர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்