விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-02-23 19:45 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 32). இவர் மோட்டார் சைக்கிளில் காரியாபட்டி - நரிக்குடி சாலையில் மந்திரி ஓடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த 2 ேபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் விஸ்வநாதன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்