ஆலங்குளம்:
ஆலங்குளம்- அம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் சரண் (வயது 21). இவரது தனது தந்தை வைத்திருக்கும் காய்கறி கடையில் உதவியாக இருந்து வந்தார். சில பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாலை காய்கனி சந்தைக்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார். ஆலங்குளம் ஊர் மடை அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்றபோது அருகில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.