மேட்டுப்பாளையம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

மேட்டுப்பாளையம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

Update: 2023-04-17 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையமத்தில் இருந்து சென்னைக்குபுறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், கவுண்டர் மில் அருகில் கொங்கு நாடு கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது ரெயில் பாதையில் வாலிபர் ஒருவர் ரெயில் மோதி, சம்பவ இடத்தில் இறந்துவிட்டார். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆர்.ஜி. முருகன், காவலர் முகமது அனீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அடிபட்டு இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியவில்லை. ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்