இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-07-11 18:50 GMT

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா மொரப்பூர் அருகே உள்ள வேட்ராயம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் அஜய் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை அஜய் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரம்பலூர் அருகே, செங்குணம் பிரிவு சாலை பகுதியில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் சைக்கிளில்சென்று கொண்டிருந்த செங்குணம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (70) மீது மோதி, சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் பலத்த காயம் அடைந்த அஜய், கோவிந்தன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜய் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்