கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை

பரங்கிப்பேட்டை அருகே கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-14 20:02 GMT

பரங்கிப்பேட்டை, 

காஞ்சீபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம் பொதிகை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் நேற்று மாலை மாலை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் தீர்த்தாம்பாளையம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் எதற்காக பு.முட்லூருக்கு வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்