விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

கலவை அருகே விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-29 17:29 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்னசமுத்திரம் மதுரா மேட்டூர் காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண் இவரை காதலிக்க மறுத்ததால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டார். அவரைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வந்த விஜயகுமார் கலவை போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வருவதால் பயந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்