ரெயில் தண்டவாளம் அருகே உள்ள ஆலமரத்தில் திடீர் தீ

திருவாரூர் தியானபுரத்தில் ரெயில் தண்டவாளம் அருகே உள்ள ஆலமரத்தில் திடீர் தீ

Update: 2023-04-04 18:45 GMT


திருவாரூர் கூட்டுறவு நகர் அருகே உள்ள தியானபுரம் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அருகில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஆலமரத்தின் அடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பணியாளர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இந்த ஆலமரத்தின் அருகில் தண்டவாளம் உள்ளதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்