போன் பேசி கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி ரெயிலில் அடிபட்டு மரணம்... தாம்பரம் அருகே பயங்கரம்

தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-02-28 08:57 GMT

தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா என்ற மாணவி தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அவர் சைக்காலஜி படித்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.  இன்று காலை தாம்பரம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை செல்போன் பேசியபடி கடக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்