மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-08-10 17:53 GMT

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராம சேவை கட்டிடத்தில் வேலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆலங்கனேரி, முருக்கம்பட்டு, மேல்மாயில் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தரிசிவக்குமார் வரவேற்றார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் மூவேந்தன், துணைத்தலைவர் ராதிகா கலந்து கொண்டனர்.

இதில் 91 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் பி.உலகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்