கொள்ளிடம் டோல்கேட், 28-
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று ஊழியர்கள் பொதுமக்களுக்கு ரேஷன் வழங்குவதற்காக அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை தூக்கினர். அப்போது மூட்டையின் அடியில் 4 அடி நீளமுள்ள பாம்பு சீறி வந்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து சமயபுரம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் நாக பாம்பை பாதுகாப்பாக உயிருடன் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர். ஏற்கனவே 2 முறை இந்த ரேஷன்கடையில் பாம்பு பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.