வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சிவகிரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-05-10 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் கணேஷ் குமார் (வயது 25). இவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றி கைகலப்பானது. இதனை இதே தெருவைச் சேர்ந்த ராமர் மகன் அய்யர் செல்வம் (20) என்பவர் சமாதானம் செய்தார்.

அப்போது கணேஷ்குமாரின் கையில் வைத்திருந்த அரிவாள், அய்யர் செல்வம் கையின் மணிக்கட்டில் பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அய்யர் செல்வம், சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்