வீட்டின் மீது இடி தாக்கியதில் பள்ளி மாணவன் பலி

ஜவ்வாதுமலையில் பலத்த மழை பெய்த நிலையில் வீட்டின் மீது இடி தாக்கியதில் பள்ளி மாணவன் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

Update: 2022-09-06 19:27 GMT

திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் பலத்த மழை பெய்த நிலையில்

வீட்டின் மீது இடி தாக்கியதில் பள்ளி மாணவன் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

திருப்பத்தூர் ஒன்றியம் ஜவ்வாதுமலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் வேடி. இவரது மகன் சிவா (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் வீட்டில் இருந்தான். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு சிவா தூங்கிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சிவா தூங்கிக் கொண்டிருந்த அறையின் மேற்கூரை மீது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிவா சம்பவ இடத்திலேயே இறந்தான்.

இது குறித்து வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடித்தாக்கி இறந்த சிவாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்