தாம்பரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

தாம்பரம் அருகே கிணற்றில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சிட்லபாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update:2023-07-03 15:58 IST

6-ம் வகுப்பு மாணவன்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், சர்வமங்களா நகர் அருகே செம்பாக்கம் ஏரி உள்ளது. இதன் அருகில் உள்ள கிணற்றில் அஸ்தினாபுரம் அடுத்த ஜமீன் ராயப்பேட்டையை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் சந்துரு(வயது 13) என்ற மாணவன் நேற்று தனது நண்பருடன் ேசர்ந்து குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்துரு, கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர், கூச்சலிட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.

நீரில் மூழ்கி பலி

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய மாணவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி, நீரில் மூழ்கிய மாணவன் சந்துருவை பிணமாக மீட்டனர். நீரில் மூழ்கிய அவன், பரிதாபமாக இறந்து விட்டான்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவன் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்