கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கடத்தூர்
கோபியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 25). இதேபோல் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவரங்காட்டூரை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகள் நந்தினி (23). பி.ஏ.பட்டதாரி. கார்த்திக்கும், நந்தினியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.