நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.;
வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் சுதா மற்றும் கவுன்சிலர்கள் கொன்னையாண்டி, சித்ரா, வள்ளி, பீட்டர், வில்சன் ராஜ், வேலுச்சாமி, மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த ஒரு வருட காலமாக பேரூராட்சி கூட்டம் சரிவர நடத்தப்படவில்லை. எங்கள் பேரூராட்சியில் எந்த ஒரு பழுதுபார்க்கும் வேலை சொன்னால் பஞ்சாயத்தில் பணம் இல்லை என்று சொல்லி மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்ய மறுக்கின்றனர். இதுவரை விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் வார்டு உறுப்பினர்கள் யாருக்குமே தெரியப்படுத்துவதில்லை. இதனை நாங்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் கேட்டால் உங்களுக்கு நாங்கள் எதற்கு வரவு, செலவு டெண்டரை பற்றி சொல்ல வேண்டும், காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர். எனவே இதற்கு உடந்தையாக இருக்கும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 26.5.2023-ந் தேதி நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஆட்சேபித்து வெளிநடப்பு செய்து பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினோம். எனவே தாங்கள் மேற்படி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அங்கீகரிக்கும்படி வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.