ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் புகார்
ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நகர தலைவர் ராமர் புகார் மனு அளித்தார். இந்துக்களை பற்றி இழிவாக பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.