புதுபத்தூரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும்
புதுபத்தூரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை;
திருவாரூர் ஒன்றியத்தில் புதுபத்தூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்த பகுதியில் ரேஷன் கடை இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்காக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிளைச்செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையில் புதுபத்தூர் பகுதியில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரேஷன்கடை அமைக்கக்கோாரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் இடும்பையன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.