உடையார்பாளையம்:
கழுமங்கலம் கிராமத்தில் கார்குடி ஏரியின் மேற்கு பகுதியில் விநாயகர், அய்யனார், வீரன், கருப்பு கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரிய வகை விஷப்பாம்பு ஒன்று வந்தது. பாம்பை கண்டு கோவில் பூசாரி ராமச்சந்திரன் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.